வேலை செய்து கொண்டிருந்த போது உடலைச் சுற்றிய ராட்சத மலைப்பாம்பு.. அலறிய நபர் - திக் திக் காட்சி

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே டேங்க் ஆப்ரேட்டரை சுற்றி வளைத்த மலைப்பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மீட்டனர். கைலாசகிரியில் டேங்க் ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் சங்கர், மலை அடிவாரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது காலை மலைப்பாம்பு ஒன்று சுற்றி வளைத்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். சங்கரின் கூச்சல் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சுற்றி வளைத்த பாம்பிடம் இருந்து சங்கரை மீட்டனர். பின்னர், பிடிப்பட்ட 10 அடி நீள மலைப்பாம்பு காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்