முதல் முறையாக உக்ரைனுக்குள் நுழைந்த புதின் - திடீர் உக்ரைன் பயணத்திற்கு காரணம் என்ன?

x

உக்ரைன் - ரஷ்ய போர் தொடங்கி ஓராண்டு கடந்து விட்ட நிலையில், முதல் முறையாக உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார், ரஷ்ய அதிபர் புதின்.

உக்ரைனில் ரஷ்ய வசம் சென்ற துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின் பொதுமக்களுடன் கலந்துரையாடும் வீடியோவை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மரியுபோல் நகரில் போர் தொடங்குவதற்கு முன்பு சுமார் ஐந்து லட்சம் மக்கள் வசித்து வந்த நிலையில், தற்போது அங்கு மூன்று லட்சம் மக்கள் வசித்து வருவதாக ரஷ்யா தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய புதின் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்