புல்வாமா தாக்குதல்.. 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தினம் இன்று.

x
  • காஷ்மீரை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடுவதால், இரு நாடுகளுக்கு இடையே கடந்த 70 ஆண்டுகளாக முரண் பாடுகள், மோதல்கள் தொடர்கின்றன.
  • இரு நாடுகளுக்கு இடையே மூன்று முறை போர் மூண்டுள்ளன.
  • 1999ல் கார்கில் பகுதியை கைபற்ற பாகிஸ்தான் முயற்சி செய்த போது, சிறிய அளவிலான போர் நடந்தது.
  • காஷ்மீரை கைப்பற்ற பாகிஸ்தான் மேற்கெண்ட அனைத்து முயற்சிகளும் தோல்விடைந்ததால், 1980களின் பிற்பகுதி யில், பயங்கரவாத குழுக்களை ஊக்குவிக்க தொடங்கியது.
  • இவர்களுக்கான பயிற்சி முகாம்கள் பாகிஸ்தானில் உருவாக் கப்பட்டன. 1989 முதல் காஸ்மீரில் சுமார் 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
  • 2015 முதல் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதல்கள் அதிகரித்து வந்தன.
  • இந்நிலையில் 2019 பிப்ரவரியில், ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்ற இந்திய ராணுவத்தினரின் வாகனங்கள் மீது, ஒரு தற்கொலைபடை தாக்குதல் நடைபெற்றது.
  • புல்வாமா மாவட்டத்தின் லெத்தபோரா பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில், 22 வயதான அடில் அகமத் தார் என்ற பயங்கரவாதி, வெடிபொருட்கள் நிறைந்த வாகனம் ஒன்றை, ராணுவ வாகனங்கள் மீது மோதி வெடிக்கச் செய்தார்.
  • இதில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் அடில் அகமத் தார் பலியாகினர்.
  • 35 பேர் படுகாயமடைந்தனர். அடில் அகமத் தார், புல்வாமா மாவட்டத்தின் கக்கபோரா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.
  • பாகிஸ்தானை தளமாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுபேற்று அறிக்கை வெளியிட்டது.
  • இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாகிஸ்தானிற்கு எதிராக ஆர்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.
  • பிப்ரவரி 26ல் பாகிஸ்தானின் பாலக்காட் பகுதியில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி முகாம் மீது, இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
  • பதிலுக்கு பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீர் பகுதி மீது தாக்குதல் நடத்தின.
  • புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தினம், 2019 பிப்ரவரி 14.

Next Story

மேலும் செய்திகள்