“சம்பள நிலுவையை வழங்குங்கள்“ - பிச்சை எடுத்து போராடிய ஊழியர்கள்

• புதுச்சேரியில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தில், ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். • புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி இயங்கி வருகிறது. • அங்கு பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 30 மாதங்களாக ஊதியம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. • இந்நிலையில், 50 க்கும் மேற்பட்டோர் சட்டசபை நோக்கி செல்ல முயன்ற நிலையில், போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. • இதனால், மறியலில் ஈடுபட்ட அவர்கள், கையில் தட்​டை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com