"துணிபோட்டு மறைப்பது குஜராத் மாடல், பேனர் வைத்து மறைப்பது புதுச்சேரி மாடல்"

x

சமூக வலைதளங்களில் கேலி செய்யும் நெட்டிசன்கள்

புதுச்சேரியில் ஜி-20 பிரதிநிதிகளின் வருகையை ஒட்டி, பேனர்கள் வைத்து கால்வாய்க்கால்கள் மறைக்கப்பட்டு வருவதால், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்

புதுச்சேரியில் ஜி-20 நாடுகள் பங்கேற்கும் 2 நாள் கூட்டம், நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்துக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்து செல்லும் சாலைகள், கூட்டம் நடைபெறும் பகுதிகள் மற்றும் தங்கும் இடங்களைச் சுற்றிலும் சாலைகள் செப்பனிடும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள குப்பை மேடுகள், தூய்மையின்றி காட்சி அளிக்கும் வாய்க்கால்கள் பேனர்கள் வைத்து மறைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, துணிபோட்டு மறைப்பது குஜராத் மாடல், பேனர் வைத்து மறைப்பதுதான் புதுச்சேரி மாடல் போன்ற வாசகங்களை சமூக வளைதளங்களில் பதிந்து, நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்