"குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. ஆண்கள்லாம் கோச்சிக்காதீங்க" - கலகலப்பாக பேசிய ஆளுநர் தமிழிசை

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, புதுச்சேரி அரசு தொடங்கி உள்ளது.

புதுச்சேரியில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 21 வயது முதல் 55 வயதிற்குட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத் துவக்க விழா கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவில் எந்தவித அரசு உதவித்தொகையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 70 ஆயிரம் குடும்பத்தலைவிகள் பயனடைவதாகவும், இதன் மூலம் அரசுக்கு மாதம் 5 கோடி ரூபாய் செலவாகின்றது எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பெண்களுக்கு செய்யும் உதவி, ஒரு குடும்பத்திற்கே செய்யும் உதவி என்று குறிப்பிட்டார். அதேபோல், பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால், முத்திரைத் தாள் செலவில் 50 சதவீதம் தள்ளுபடி என்பதை புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் ரங்கசாமி கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com