புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கு.. பிரபல பெண் தாதாவுக்கு ஆப்பு

x

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்‌.சி. சிவகுமார் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளை, காரைக்கால் மாவட்டத்தில் நுழைய மாவட்ட துணை ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார், கடந்த 2017 ம் ஆண்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பிரபல பெண் தாதா எழிலரசி மற்றும் அவரது கணவர் விக்ரமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது இருவரும் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், எழிலரசி மற்றும் விக்ரமன் இருவரும் பலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து இருவரையும் காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்து, மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்