கூடவே இருந்து குழி பறித்த கார் ஓட்டுநர்.. கோடி கணக்கில் இழந்து நிற்கும் மூதாட்டி - புதுச்சேரியில் வினோதமான கொள்ளை

x
  • புதுச்சேரியில், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டியை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்த கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
  • புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவரது மகன்கள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆதிலட்சுமி தனது வங்கி கணக்கில் இருந்து பணம் மற்றும் நகைகள் மாயமானதாக சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
  • மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு தனக்கு உதவியாளராகவும், கார் ஓட்டுநராகவும் இருந்த ஜெயராமன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
  • புகாரின் பேரில் ஜெயராமனை கண்காணித்த போலீசார், அவரது நடத்தையில் சந்தேகம் இருந்ததையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
  • இதில், மூதாட்டியின் வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்து கொண்ட ஜெயராமன், வங்கியில் இருந்து இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை எடுத்து விழுப்புரம் அருகே பண்ணை வீடு ஒன்றை தனது நண்பரின் பெயரில் வாங்கியது தெரிவ வந்தது.
  • மேலும், மூதாட்டிக்கு சொந்தமான ஒரு வீட்டை தனது நண்பரின் பெயருக்கு மாற்றியுள்ளார். தற்போது, ஜெயராமன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்