விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட ஆட்சியர்...ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டு

x

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட ஆட்சியர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேக்கப், தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓசூருக்கு சென்றார். அப்போது, சூளகிரி அருகே இருசக்கர வாகன விபத்தில், முதியவர் ஒருவர் காயமடைந்தார். இதையறிந்த ஆட்சியர் தீபக் ஜேக்கப், உடனடியாக காரிலிருந்து இறங்கி, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆட்சியரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்