"இயற்கை மரணத்திற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்"... நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்த‌ நபர் - பயிற்சி மருத்துவரை சரமாரியாக தாக்கிய உறவினர்கள்

x

"இயற்கை மரணத்திற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்"... நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்த‌ நபர் - பயிற்சி மருத்துவரை சரமாரியாக தாக்கிய உறவினர்கள்


பாளையங்கோட்டை பெருமாள் புரத்தைச் சேர்ந்த குருசாமி, நுரையீரல் தொற்று காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு உயிரிழந்தார். பயிற்சி மருத்துவர் நித்திஷ் ஆர்தர் ஊசி போட்டதால் தான், குருசாமி உயிரிழந்த‌தாக குற்றம் சாட்டிய உறவினர்கள், மருத்துவரை தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் தூக்கி வீசி சேதப்படுத்தியதோடு, மற்ற மருத்துவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த‌தை அடுத்து மருத்துவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்