இந்தியாவில் பல உயிர்களை குடித்த PUBG...ரத்தின கம்பளம் விரிக்கும் மத்திய அரசு

x

23 வருடங்களுக்கு முன்பாக 2000-ல் வெளியான ஜப்பானிய திரைப்படம் பேட்டில் ராயல்...

தனக்கென ஒரு படையினை உருவாக்கும் பள்ளி மாணவர்கள், ராணுவ வீரர்கள் போர்களத்தில் சண்டையிடுவது போலவே பயங்கர ஆயுதங்களுடன் ரத்தம் தெறிக்க சண்டையிடம் ஒரு ஆக்சன் திரைப்படம்...இத்திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி சில நாடுகளில் தடை செய்யப்பட்டது ஒரு பக்கம்... இந்நிலையில், இத்திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு, சில மாற்றங்களோடு உருவானது தான் Player Unknown's Battlegrounds என்ற பப்ஜி கேம்....

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிராப்டன் நிறுவனம் உருவாக்கிய இந்த பப்ஜி விளையாட்டிற்கு கொத்து கொத்தாக இந்திய இளைஞர்கள் பலர் அடிமையாகி விளையாட ஆரம்பித்தனர்... இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என ட்ரிக்ஸ் சொல்லி தருவதாக கூறி பல யூடியூபர்களும் சம்பாதித்தனர்... இதில் ஒருவர் தான் நாம் அறிந்த பப்ஜி மதன்... ட்ரிக்ஸ் சொல்லி தருவதாக கூறி மாதம் 7 லட்சம் வரை சம்பாதித்து ஆடி கார் வாங்கிய அவர், தரக்குறைவான வார்த்தைகள் பேசி சிறை சென்றது குறிப்பிடத்தக்கது... உலகே, இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாகவும், பலமாகவும் கருதும் இந்திய இளைஞர்களை, இந்த பப்ஜி விளையாட்டின் மீது கொண்ட மோகத்தாலும், அறியாமையிலும் நாம் இழந்தது ஏராளம்...

ராஜஸ்தானில் தனது அண்ணனுடன் சேர்ந்து ரயில் தண்டவாளத்தில் பப்ஜி விளையாடி கொண்டிருந்த சிறுவன்.. தண்டவாளத்தில் ரயில் வருவதை அறியாமல் அண்ணனுடன் சேர்ந்தே ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது... மத்தியப்பிரதேசத்தில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு, திடீரென தண்ணீர் தாகம் எடுக்கவே, விளையாடி கொண்டிருந்த படியே தண்ணீருக்கு பதிலாக நகைகளை பாலிஷ் செய்ய வைத்திருந்த ரசாயனத்தை குடித்து பலியானது...

லக்னோவில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது திட்டிய தாயை, 17 வயது சிறுவன் தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டு கொன்றது... என இந்திய முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம் பப்ஜியால் இளைஞர்கள் உயிர் துறந்த சம்பவத்தை... இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 16 வயது சிறுவன் நாள் முழுவதும் பப்ஜி விளையாடி கொண்டிருந்ததால், மன நலம் பாதிக்கப்பட்டு பப்ஜி விளையாடுவது போலவே சைகைகளை செய்தபடியே மயங்கி உயிரிழந்ததை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்... இதையெல்லாம் விட, பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரென நெட்பேக் தீர்ந்து போனதால் 8 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் வேதனைக்குரிய ஒன்று...

இந்த துயரச் சம்பவங்களை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, தென்கொரியா தயாரித்த இந்த பப்ஜி கேமின் சர்வர் சீனாவுடன் தொடர்பிருப்பதாக கூறி கடந்த 2020 செப்டம்பரில் இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்தது...இந்நிலையில், மீண்டும் அதே தென்கொரியாவின் கிராப்டன் நிறுவனம், சீன சர்வர் தொடர்பு இல்லாமல் இந்தியாவுக்கு என பிரத்யேகமாக பப்ஜி செயலியை வடிவமைத்ததாக கூறுகிறது. இதனை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட கிராப்டன் நிறுவனத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு அனுமதியும் வழங்கியிருக்கிறது...

3 மாதங்கள் சோதனை அடிப்படையில் செயலியை இந்தியாவில் தரவிறக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், விளையாட்டு நடைமுறையை மத்திய அரசு கண்காணிக்கும் என மத்திய கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்... விளையாட்டு என்பது உடலுக்கு பலத்தையும் உள்ளத்திற்கு புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, கொடுர எண்ணங்களையும், கொலை செய்ய தூண்டுவதும்விளையாட்டே கிடையாது. விளையாடுங்க ...உடல் ..பலமாகுங்க.... விளையாட்டு ப்ரியர்களே


Next Story

மேலும் செய்திகள்