"மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு"- அமைப்பின் தலைவர் மீது சரமாரி புகார்

x

பாலியல் தொல்லைக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் முன்வந்து புகார் அளிக்கலாம் என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடி உஷா தெரிவித்துள்ளார்.


இந்திய மல்​யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினர்.


இதையடுத்து, மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது விசாரணை மேற்கொண்டுள்ளது.


இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து புகார் அளிக்கலாம் என்றும், உரிய குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு நீதி வழங்கப்படும் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடி உஷா தெரிவித்துள்ளார்.


வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதுடன், எதிர்காலத்தில் பாலியல் புகார் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிடி உஷா குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்