இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா

x

பிரபல தடகள வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார். ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று, வெவ்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். பி.டி.உஷா மற்றும் அவருடைய குழுவினர் 14 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். தலைவர் பதவிக்கு பி.டி.உஷா மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். இதன்மூலம், அந்த சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெறவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்