நாளை விண்ணில் சீறிப்பாயும் பிஎஸ்எல்வி- C55 ராக்கெட் - திருப்பதியில் மாதிரியை வைத்து பூஜை

x

நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி55 ராக்கெட் மாதிரியுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள், திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட், சிங்கப்பூரின் 'டெலியோஸ் - 02' செயற்கைக்கோளை சுமந்து நாளை பிற்பகல் 2:19 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கைகோள், புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது.இந்த நிலையில் பிஎஸ்எல்வி - சி55 ராக்கெட் மாதிரியுடன் திருப்பதிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள், இன்று காலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்