இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி - சி55... திருப்பதியில் தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்..!

x

சிங்கப்பூர் அரசு நிறுவனம் தயாரித்த டெலியோஸ் - 2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று (22.04.2023) விண்ணுக்கு அனுப்புகிறது. 741 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி - சி 55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, 16 கிலோ எடை கொண்ட லூம்லைட் - 4 என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் கிழக்கு நோக்கி குறைந்த கோணத்தில் அமையும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து (22.04.2023) மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்