புதிய சர்ச்சையில் 'PS1' வசனகர்த்தா ஜெயமோகன் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

x

பொன்னியின் செல்வன் வசனகர்த்தா ஜெயமோகன் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

பிரபல கதை எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான ஜெயமோகன், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி, அதிகமாகப் பேசப்படுபவர்.

அந்த வரிசையில் சில நாள்களாக சமூக ஊடகங்களில் அவரை வலைவாசிகள் பிரித்து மேய்ந்துவருகிறார்கள்.

அறைகலன் என்ற தமிழ்ச்சொல்லை தானே கண்டுபிடித்ததாக ஜெயமோகன் குறிப்பிட்டதுதான், சர்ச்சைக்குக் காரணம்.

பல ஊர்களில் பர்னிச்சர் கடைகளில் அறைகலன் கடை என எழுதப்பட்டிருப்பதை சர்வசாதாரணமாகப் பார்க்கமுடியும்.

சென்னை போன்ற பல மாநகராட்சிகளில் இப்படி தமிழில் எழுத வணிக நிறுவனங்களை அரசு ஊக்குவித்து வருகிறது.

1994ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ஒரு நூலில், இந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது.

1993ல் தமிழறிஞர் மணவை முஸ்தபா தொகுத்த அறிவியல் தமிழ் களஞ்சியம் நூலிலும் அறைகலன் என்கிற வார்த்தை இடம்பெற்று இருந்தது.

அதற்கும் முன்னதாக1974ஆம் ஆண்டிலேயே தமிழறிஞர் கீ. ராமலிங்கனார் எழுதிய ஆட்சித்துறை தமிழ் எனும் நூலில், அறைகலன் எனும் வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார்.

ஆனால், வசனகர்த்தா ஜெயமோகனோ, 2014ல் எழுதத் தொடங்கிய நாவலில், தான்தான், முதன்முதலாக இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிட்டதே, பிரச்னை ஆகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்