கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் - சீனாவில் பரபரப்பு

x

சீனாவில் கொரோனாவுக்கு எதிராக அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள், வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் தொடர்ந்து நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது நாற்பதாயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், சீன அரசு விதித்துள்ள கடும் கொரோனா பாதிப்பால் விரக்தியடைந்துள்ள மக்கள், பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக மிக நீண்ட கால கொரோனா ஊரடங்கு ஆளான ஷாங்காய் நகர மக்கள் அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்