திடீரென பொங்கிய போராட்டக்காரர்கள்.. இந்து அமைப்பினரை விரட்டியடித்த போலீஸ் - மகாராஷ்டிராவில் பதற்றம்

திடீரென பொங்கிய போராட்டக்காரர்கள்.. இந்து அமைப்பினரை விரட்டியடித்த போலீஸ் - மகாராஷ்டிராவில் பதற்றம்
Published on

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் செவ்வாய்கிழமை சில இளைஞர்கள் அவுரங்கசீப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு வைரலாக பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லஷ்மிபுரா காவல் நிலையம் முன்பு இந்து அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.அவுரங்கசீப் மற்றும் திப்பு சுல்தான் குறித்து ஸ்டேட்டஸ் சிலர் தங்கள் மொபைலில் கோலாப்பூரில் வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இந்து அமைப்புகள் இன்று திரண்டனர்.ஆட்சேபனைக்குரிய பதிவுகளைப் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகள் இன்று கோலாப்பூர் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தன.போராட்டத்தின் போது, ​​நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com