பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு - ஆர்டிஓ காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்கள், வருவாய் கோட்டாட்சியரின் காலில் விழுந்து கதறி அழுதனர். 146 நாட்களாக போராட்டம் நடத்தி வரும், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தியபோது, திடீரென்று அவருடைய காலில் விழுந்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. விளை நிலங்களையும், வீடுகளையும் அழித்து விட்டு, விமான நிலையம் அமைக்க கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com