கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 169-வது நாளாக தொடரும் பரந்தூரில் மக்களின் போராட்டம்

x

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகானபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 169-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க, பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விமான நிலையம் அமைக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என கூறி, அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஏகானபுரம் கிராம மக்கள், தொடர்ந்து 169-வது நாளாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்