ஏரோட்டும் நிலத்தில்.. ஏர்போர்ட் தேவையா..? - சிறுமி கண்டன கோஷம்- 166ஆவது நாளாக தொடரும் போராட்டம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,166ஆவது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட கோரி, சிறுமி ஒருவர் தலைமையில் கிராம மக்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் பங்கேற்ற முதியோர், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் விவசாயத்தையும், விளை நிலங்களையும் காக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்