பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 162-வது நாளாக தொடரும் போராட்டம்

x

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,162-வது நாளாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கி பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து 162-வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் கருப்புக்கொடி ஏந்தி கணடன கோஷங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்

முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்