மதுபான விற்பனை விளம்பரம் செய்ய தடை... கலால்துறை தாசில்தார் அதிரடி உத்தரவு

x

புதுச்சேரி கலால்துறை தாசில்தார் சிலம்பரசன், மதுபானங்களின் விற்பனை தொடர்பான விளம்பரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மதுக்கடை உரிமையாளர்கள், பல்வேறு பகுதிகளில் மதுவிற்பனை சலுகைகள் குறித்து விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மதுபான விற்பனையாளர்கள் விளம்பர பதாகைகளையும், சமூக வலைதளங்களில் உள்ள விளம்பரங்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். விதிமீறலில் ஈடுபட்டால் புதுச்சேரி கலால் விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்