"புதிய வாகனங்கள், பர்னிச்சர்கள் வாங்க தடை.." - நிதித்துறை செயலர் அறிவிப்பு

x

"புதிய வாகனங்கள், பர்னிச்சர்கள் வாங்க தடை.." - நிதித்துறை செயலர் அறிவிப்பு

இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், புதிய அலுவலகங்கள் உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு பராமரிப்புக்காக மட்டுமே புதிய பர்னிச்சர்கள் வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறைக்கு இயந்திரங்கள் வாங்கலாம் என்றும், மற்ற துறைகளுக்கு ஓராண்டுக்கு கொள் முதல் தள்ளி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்கள் கொள்முதல் செய்வதற்கான தடை தொடர்கிறது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதே நேரம் பழைய பழுதடைந்த வாகனங்களுக்கு பதில் புதியது வாங்கலாம் என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், துறை தலைவர்கள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் நிதி செயலர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்