மனநலம் குன்றியவர்களை அரசு காப்பகத்துக்கு மாற்ற தடை
ராமநாதபுரம் தனியார் மனநல காப்பகத்தில் இருந்து 40 நபர்களை அரசு காப்பகத்திற்கு மாற்ற தடை விதிக்க கோரிய வழக்கில் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த மனுவை விசாரித்த, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மருத்துவக்குழு அறிக்கையை ஏற்க முடியாது என்றார்.மனநலம் குன்றியவர்கள் தற்போதைய சூழலை நன்றாக பழகியிருப்பார்கள் என்றும், அதிகாரிகள் தங்கள் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப மனநலம் குன்றியவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்ற அவர்கள் ஒன்றும் கால்நடைகள் அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்தார். இவர்களால் அந்த சூழ்நிலையை விட்டு வெளியேற முடியாது என்றும், வேறு இடத்துக்கு மாற்றுவதால் பிரச்சினை ஏற்படும் என கூறி 40 மனநலம் குன்றியவர்களை அரசு காப்பகத்துக்கு மாற்ற தடை விதித்து உத்தரவிட்டார்.
Next Story
