திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி..ஆடுகளை பலி கொடுத்து சிறப்பு பூஜைகள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் அருகே உப்பட்டியில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா, கடந்த 30 ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு கூத்தாண்டவருக்கு கண் திறப்பு மற்றும் ஆடுகள் பலி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, திருநங்கைகளுக்கு பூசாரி தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அவர்கள், கோவில் பூசாரிக்கு பரிவட்டம் கட்டி, காணிக்கை கொடுத்து, நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து தாலி அறுப்பு, பூஜைகள் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்