"தினமும் உள்ளுக்குள்ள செத்துட்டு இருக்கேன்மா" - கண்ணீர் விட்ட பேராசிரியர்.. கலங்கி நின்ற மாணவிகள்

x

நாமக்கல்லில் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் காழ்ப்புணர்ச்சியில் செயல்படுவதாக கூறி, கல்லூரி வளாகத்திலே பேராசிரியர் ஒருவர் மனமுடைந்து அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் முதல்வராக இருப்பவர் பால் கிரேஸ்.

இந்த கல்லூரியின் வணிகவியல் துறையின் பேராசிரியரான நல்லுச்சாமி, துறையில் பயிலும் மாணவிகளின் பயிற்சி வகுப்பின் வாய்மொழித் தேர்விற்காக கையொப்பம் பெற முதல்வரிடம் சென்றுள்ளார்.

அப்போது, நல்லுச்சாமியை மாணவிகள் முன்பு பால் கிரேஸ் தரக்குறைவாக பேசியதாகவும், கையொப்பம் தர மறுத்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த நல்லுச்சாமி கல்லூரியின் வளாகத்திலே மாணவிகள் முன்பு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர், இது போன்று பல்வேறு இடர்பாடுகளை தனக்கு தந்துள்ளதாகவும், நான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் தான் காரணம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்