"புது செல்போன் சார்ஜரில் பிராப்ளம்.." - கடை உரிமையாளரை தாக்கிய போதை கும்பல் -வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

நெய்வேலி டவுன்ஷிப்பில் புதிதாக வாங்கிய செல்போன் சார்ஜர் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி, செல்போன் கடை உரிமையாளரை மது போதையில் இருந்த இளைஞர்கள் தாக்கிய சம்பவப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாகூப் என்பவரின் கடையில் செல்போன் சார்ஜர் வாங்கிச் சென்ற இளைஞர், பின்னர் மீண்டும் தனது நண்பர்களுடன் வந்து, சார்ஜர் வேலை செய்யவில்லை எனக் கூறி, வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில், அவர்கள் கடை உரிமையாளரையும், அவரைத் தடுக்க வந்தவரையும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். காயமடைந்த யாகூப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com