"ஐ.டி நிறுவனங்களில் சேர்க்கை சரிய வாய்ப்பு" - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்'

x

2024இல் இந்திய ஐ.டி நிறுவனங்களில் ஆளெடுப்பு 40 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் புதிய ஆர்டர்களின் அளவு குறைந்துள்ளதும், பிராஜக்ட் இல்லாமல் பெஞ்ச் எனப்படும் ஓய்வில் இருக்கும் ஐ.டி ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. டீம்லீஸ் டிஜிட்டல் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. . ஐ.டி நிறுவனங்களில் இருந்து ராஜினாமா செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2023இல் பொறியியல் பட்டம் பெற்ற புதிய பட்டதாரிகளில், 2.3 லட்சம் பேர் ஐ.டி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2024இல் பட்டம் பெறுபவர்களில் 1.55 லட்சம் பேர் மட்டும் இந்திய ஐ.டி நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 2021-22இல் 6 லட்சம் பேரை ஐ.டி நிறுவனங்கள் பணியமர்த்தியிருந்து ஒப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்