ப்ரோ கபடி லீக்.. விறுவிறுப்பான டை பிரேக்கர்.. முதல் முறை அரையிறுதியில் தமிழ் தலைவாஸ்

x

9வது ப்ரோ கபடி லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டி மும்பையில் நடைபெற்றது.

இதில் தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36க்கு 36க்கு என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க டை பிரேக்கர் முறையான சூப்பர் ரெய்டு அளிக்கப்பட்டது.

இதில் 6க்கு4 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்றது.

நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி புனேரி பல்தான் அணியுடன் மோதுகிறது.


Next Story

மேலும் செய்திகள்