பிரியா உயிரிழந்த விவகாரம் - தமிழக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கேள்வி | Football Player Priya

x

வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு, 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கையில், பெரியார் நகர் மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்கு அவசியமான வசதிகள் இருந்ததா? அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பில் என்ன குறை? என்பதற்கெல்லாம் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.அரசு மருத்துவமனைகள் நரகமாக மாறுகிறதோ என யோசிக்க வைப்பதாக மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மாநில செயலாளர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனையின் அலட்சியம் பொதுமக்களை வேதனைக்குள்ளாக்குவதாக விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் வெளியிட்ட அறிக்கையில், இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பிரியாவின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிதிதொகை வழங்ககுமாறு வலியுறுத்தி உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்