ராகுலுக்கு பதில் பிரியங்கா காந்தி..! சத்தமில்லாமல் நடந்த மாஸ்டர் பிளான் - கடும் கொந்தளிப்பில் காங்கிரஸார்

x

வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த மாதம் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது, சூரத் நீதிமன்றம். சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தொடுத்த வழக்கில் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை

இந்நிலையில், அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தியின் எம்பி பதிவு பறிக்கப்பட்டதோடு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் , அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு, ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக காலியாக இருக்கும் வய நாடு தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

பொதுவாக ஒரு சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு விட்டால், ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த சூழலில் வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களே கடந்துள்ள நிலையில்,

ராகுலின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வராத சூழலில், வயநாட்டில் இடைத்தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

வயநாடு தொகுதிக்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அதோடு, புதன் அன்று கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி சுமார் 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுலுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டிருந்தார். இதனால், வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெற்றால் பிரியங்கா காந்தியையே வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்