பிரியா நினைவு மகளிர் கால்பந்து போட்டி - வீராங்கனைகளிடம் கால்பந்தை கொடுத்து போட்டியைத் துவக்கி வைத்த பிரியாவின் தாயார்

x

திமுக இளைஞரணி செயலாளரும் எம் எல் ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக, சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மறைந்த கால்பந்து வீராங்கனை பிரியா நினைவாக கால்பந்து போட்டிகள் இன்றும் நாளையும் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளன. இந்நிகழ்வில், அமைச்சர் மெய்யநாதன், சேகர்பாபு, முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் சையத் சபீர் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 16 கால்பந்து கிளப் அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், பிரியாவின் தாயார் கையில் கால்பந்தைக் கொடுத்து போட்டியைத் துவக்கி வைக்குமாறு அமைச்சர்கள் சேகர்பாபுவும், மெய்யநாதனும் கேட்டுக் கொண்டனர். தனது மகள் இருந்திருந்தால் இதேபோல் பல விளையாட்டுகளில் கலந்து கொண்டிருப்பாரே என்ற கனத்த மனத்துடனும், தனது மகளின் நீங்கா நினைவுகளுடனும் பந்தை வாங்கிய பிரியாவின் தாய், கால்பந்தை தன் மகளைப் போன்ற வீராங்கனைகளிடம் கொடுத்து போட்டியைத் துவக்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்