தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களிடம்... அத்துமீறும் கானா பாடகர் அசல் கோளாறு..? - சமூக வலைத்தளங்களில் பரவும் சர்ச்சை

x

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களிடம்... அத்துமீறும் கானா பாடகர் அசல் கோளாறு..? - சமூக வலைத்தளங்களில் பரவும் சர்ச்சை

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கானா பாடகர் அசல் கோளாறு பெண்களிடம் அதிக நெருக்கம் காட்டுவது போன்ற காட்சிகள் இணையவாசிகளின் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது...

இதற்கு முன்பாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடலாசிரியர் சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இப்போது கானா பாடகரான அசல் கோளாறு என்பவர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் நிலையில் பெண்களிடம் அதீத நெருக்கம் காட்டுவதும், அவர்களை தொட்டு பேசுவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் அசல் கோளாறு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்