பயணிகளுக்காக சண்டை போட்ட மினி பஸ்கள்.. அசுர வேகத்தில் மோதி சுக்குநூறான கண்ணாடி

x

தென்காசி அருகே போட்டி போட்டு சென்ற மினி பஸ்கள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளை ஏற்றுவதற்காக இரண்டு மினி பேருந்துகள் போட்டி போட்டு வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது முன்னாள் சென்ற மினி பேருந்து திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், பின்னால் வந்த மினிபேருந்து மோதியுள்ளது. பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

சேதமடைந்த இரண்டு மினி பேருந்துகளும் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்