தனியார் பேருந்தை மறித்து உள்ளே ஏறி தாக்குதல் - அலறிய பயணிகள்..பரபரப்பு காட்சிகள்

நாமக்கல் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் இருந்து நாமக்கல் சென்ற தனியார் பேருந்தை, காரில் வந்தவர்கள் முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, பேருந்து ஓட்டுநர் வழிவிடாததால், காரில் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து மீண்டும் திருச்சி நோக்கிச் சென்ற பேருந்தை, வளையப்பட்டி அருகே வழிமறித்த அக்கும்பல், பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com