அசுரவேகத்தில் வந்து சென்டர் மீடியனில் மோதிய தனியார் பேருந்து.. பயணிகளின் நிலை..?பதைபதைக்கும் காட்சி

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாலை தடுப்பில் மோதி தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற போது, பள்ளிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மேலும் அதிகாலையில் விபத்து நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்