தண்ணீர் பிடிப்பதில் தகராறு - மத்திய சிறையில் அடித்துக்கொண்ட கைதிகள் - புதுச்சேரியில் பரபரப்பு

x

புதுச்சேரி மத்திய சிறையில் இரு கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிறை வளாகம் பரபரப்பானது. புதுச்சேரி மத்திய சிறையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருபவர் மூலவன். இவருக்கும், கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் செல்வக்குமாருக்கும் இடையே சிறையில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரும்பு வாளியை கொண்டு செல்வக்குமார் தாக்கியதில் மூலவன் படுகாயம் அடைந்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூலவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, செல்வக்குமார் மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்