PRIME TIME NEWS | முத்திரைத்தாள் சட்ட மசோதா முதல் பல்வீர் சிங் மீது பாய்ந்தது வழக்கு வரை (17.04.23)

x

உயரும் முத்திரைத் தாள் கட்டணம்

முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்த முடிவு....

சட்ட திருத்த முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல்...

----------------------

ஈபிஎஸ் கவனம் ஈர்ப்பு - விளக்கம்

லண்டனில் பென்னி குயிக் சிலை சேதமடைந்திருப்பது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கவன ஈர்ப்பு...

சிலை பராமரிப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அமைச்சர் துரைமுருகன் விளக்கம்...

ஈபிஎஸ் பேசியதை நேரலையில் ஒளிபரப்பவில்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு...

-----------------

"நெருப்புடன் விளையாடுவதை போன்றது"

அதிமுகவுடன் விளையாடுவது, நெருப்புடன் விளையாடுவதை போன்றது...

சொத்து பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று எச்சரிக்கை...

----------------------

பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய புகாரில்

ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளில் இன்று வழக்குப்பதிவு...

போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து பிறழ் சாட்சியாக மாறியதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு...

---------------------

பஞ்சாப் துப்பாக்கிச்சூடு - ராணுவ வீரர் கைது

பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சக ராணுவ வீரர் இன்று கைது...

ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கியை திருடி சுட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம்...

------------------

காங்கிரசில் இணைந்த ஜகதீஷ் ஷட்டர்

பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் இன்று காங்கிரஸில் இணைந்தார்...

ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிப்பு...

பாஜக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...



Next Story

மேலும் செய்திகள்