பிரதமர் மோடியின் பயணம் - குஜராத் முதல்வருக்கு நேர்ந்த கதி..! - விளாசும் எதிர்க்கட்சியினர்

x

பிரதமர் மோடியின் குஜராத் சுற்றுப்பயணத்தின் போது, அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் நடத்தப்பட்ட விதம், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் அம்மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் காரில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் ஏறுவதற்குள் கார் புறப்பட்டுவிட்டது. அப்போது குஜராத் முதல்வரை தேசிய பாதுகாப்பு படை சேர்ந்த வீரர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து, பாதுகாப்பு வீரர்களோடு சேர்ந்து குஜராத் முதல்வரும் நடந்தே சென்றார். இந்த வீடியோவை வெளியிட்டு, பாரத் ராஷ்டிரிய சமிதி, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்