சென்னை To கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.. எந்த பிளாட்பாரத்தில் விழா?

x


சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை உட்பட 3 முக்கிய ரயில் திட்டத்தை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார் ,

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்தான தகவல்களை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்டுப் பெறலாம்.

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலின் 12 வது சேவை சென்னை கோவை இடையே இன்று முதல் இயக்கம்

மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் 5 அடுக்கு காவல் துறை பாதுகாப்பு , விழா நடைபெறும் 10 மற்றும் 11 ஆம் நடைமேடையில் கட்டுப்பாடுகள் தீவிரம்.

மொத்தம் 5 மணி, 50 நிமிடத்தில் சென்னையில் இருந்து கோவைக்கும் கோவையிலிருந்து சென்னைக்கும் வந்தடையும் வண்ணம் வந்தே வாரத்தில் இயக்கம்

கோவையில் இருந்து சரியாக காலை 6 மணிக்கு புறப்பட்டும் வந்தே பாரத் ரயில் திருப்பூர் ஈரோடு சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என அட்டவணை வெளியீடு.

மறுமார்க்கத்தில் மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

மொத்தம் 8 ஏசி பெட்டிகளுடன் இயக்கப்படும் ரயிலில் 536 இருக்கைகள் உள்ளன குளிர்சாதன chair car இருக்கைக்கு அதிகபட்சமாக கட்டணம் 1215 ரூபாய் வரையிலும் குளிர்சாதன Executive chair car இருக்கைக்கு ரூபாய் 2310 வரையிலும் கட்டணம் நிர்ணயம்.

பயணிகளின் வருகையை பொறுத்து வந்தே பாரத் ரயிலியில் 16 பெட்டிகள் வரை கூடுதல் பெட்டிகள் இணைக்க திட்டம்.

இது தவிர தாம்பரம் செங்கோட்டை இடையே விரைவு ரயில் சேவையும் , திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளியிடையே 37 கிமீ தொலைவுக்கு 294 கோடி மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள அகல ரயில் பாதை மற்றும் 2 டெமு ரயில் சேவையையும் அறிமுகப்படுத்துகிறார்..

தெற்கு ரயில்வேயில் 2037 கிமீ நீளமுள்ள பாதையில், வேகத்தை மேம்படுத்தும் பணிகள் இந்த ஆண்டில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்