விமானப்படைக்கு வலு சேர்க்க வரும் இந்தியாவின் தயாரிப்பு - 70 விமானங்கள் - ரூ.6,800 கோடி

இந்திய விமானப்படைக்கு 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு 70 பயிற்சி விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
x

குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் மட்டுமே இடம் பெறுகிற டிபென்ஸ்எக்ஸ்போ-22 ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வடிவமைத்துள்ள உள்நாட்டு பயிற்சி விமானம் எச்டிடி-40ஐ பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார்.

இந்த பயிற்சி விமானங்களை இந்திய விமானப்படைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

6 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு 70 எச்டிடி-40ஐ பயிற்சி விமானங்கள் விமானப்படைக்கு வாங்கப்படுகிறது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 3 ஆண்டுகளுக்குள் பயிற்சி போர் விமானங்களை டெலிவரி செய்ய தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு முதன்மை பயிற்சி தேவைகளை பூர்த்தி செய்ய அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்த எச்டிடி-40ஐ விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்