பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி,முதல்வர் ஸ்டாலின் - தென்மண்டல போலீஸ் ஐஜி ஆய்வு

x

பிரதமர் மோடி, வருகிற 11ஆம் தேதியன்று தமிழகம் வருகிறார்.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கினை தென்மண்டல ஐஜி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 -வது பட்டமளிப்பு விழா வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதனையொட்டி தென்மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான அதிகாரிகள், பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கவுள்ள இறங்கு தளம், பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்