தனியார் நிலத்தில் கட்டப்பட்ட மதிற்சுவரை இடித்து தள்ளிய பாதிரியார்கள் - குமரியில் பரபரப்பு

x

கன்னியாகுமரி அருகே தனியார் நிலத்தை சுற்றி கட்டப்பட்ட மதிற்சுவரை, கிராம மக்கள் இடித்து தள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் பகுதியில் இருக்கும் நிலம் தொடர்பாக இருதரப்பினரும் உரிமை கோரி வந்தனர்.

வருவாய் துறையினரின் உத்தரவுப்படி நிலத்தின் உரிமையாளராக அகமது ரஹீம் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த நிலத்தை சுற்றி மதிற்சுவரும், முள்வேலியும் அமைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தூத்தூர் மண்டல பங்கு தந்தையர்கள் மதிற்சுவரை இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்