"தீட்சிதர்கள் பொதுமக்களோடு இணக்கமாக இருக்க வேண்டும்"கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்

x

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பூஜை வழிபாடு செய்ய முடியவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செயலாளர் சிவராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமஞ்சன உற்சவம் நடைபெறும் சமயத்தில் பூஜை மற்றும் வழிபாடுகளை மேற்கொள்ள கோயில் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கோயிலுக்குள் அதிக அளவு போலீசாரை குவித்துள்ளதாகவும் இதனால் பூஜை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சிவராமன் தெரிவித்துள்ளார். திருமஞ்சன உற்சவத்திற்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்ட பின் தங்களை அச்சுறுத்தும் வகையில் கோயில் வளாகத்திற்குள் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்