"முதல்வருக்கு அழுத்தம்" - அன்புமணி அழைப்பு

x

இடஒதுக்கீடு வழங்குவதில் உறுதியாக இருப்பதாக பேரவையில் முதலமைச்சர் அறிவித்தது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை காலம் நெருங்கிக் கொண்டிருப்பது, கவலை அளிப்பதாக, தமது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மே 31ஆம் தேதிக்குள் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகவே, வன்னியர்களுக்கு சமூக நீதியை வழங்க முடியும் என்றும், ஆணையம் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தால், மே 31க்குள் சட்டம் இயற்றுவது சாத்தியமே எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், வன்னியர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் கடிதம் எழுதி அழுத்தம் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்