"அதிபர் ஒபாமா.. இல்ல..சாரி அதிபர் ஜோ பைடன்"... ஐயோ பாவம்! அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க

x

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க அதிபர் பைடன் என்பதற்கு பதிலாக ஒபாமா என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலக வங்கியின் புதிய தலைவராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பின் போது, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், செய்தியாளர்கள் முன்னிலையில், "அதிபர் பைடன் அறிவித்ததைப் போல என்பதற்கு பதிலாக, அதிபர் ஒபாமா அறிவித்ததைப் போல"... என்று தவறுதலாக கூறி விட்டு, உடனடியாக அதை சரி செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்