"திராவிட கட்சிகளுக்கு மாற்று; போருக்கு தயாராகுங்கள்.!" - விஜய் அதிரடி | Vijay

x

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக உருவெடுக்கும் பட்சத்தில் தனித்து தான் செயல்படும் என்றும், திராவிட கட்சிகளுக்கும், தமிழ் தேசிய கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக மாற்றாக செயல்படும் என்றும் கூறியதாக தெரிகிறது. விரைவில் சென்னையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜய் அரசியல் சார்ந்த கருத்துக்களை பேச உள்ளதாகவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் எதையும் எதிர்க்க தயாராக வேண்டும் என்றும், நிர்வாகிகளுக்கு, நடிகர் விஜய் ஆலோசனையின்படி புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்