கர்ப்பிணி மீது பாய்ந்த தோட்டா.. முன்னாள் காதலன் பகீர் செயல் | நடந்தது என்ன?

x

கர்ப்பிணி மீது பாய்ந்த தோட்டா.. முன்னாள் காதலன் பகீர் செயல் | நடந்தது என்ன?


அமெரிக்காவில் அமேசான் கிடங்கிற்கு வெளியே கர்ப்பிணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மினசோடா மாகாணத்தில் உள்ள லேக்வில்லே பகுதியில் அமைந்துள்ள அமேசான் கிடங்கிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் 31 வயதான கைலா ஓ நீல் என்ற கர்ப்பிணி துப்பாக்கியால் சுடப்பட்டார். இது தொடர்பாக கைலாவின் முன்னாள் காதலரும் குழந்தையின் தந்தையுமான டான்டே ரஃபேல் மெக்ரே போலீசாரால் கைது செய்யப்பட்டார். படுகாயங்களுடன் கைலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியே எடுத்தனர். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தையின் மூளை செயல்படவில்லை என கைலாவின் தாயார் கண்ணீர் வடித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் வாக்குவாதத்தால் கைலாவும் டான்டேவும் பிரிந்துள்ளனர். கைலாவுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், 4வது குழந்தையைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்