சுற்றிவளைக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி.. வாரிசு, துணிவு போஸ்டர்கள் அகற்றம் - கல்வெட்டுகள், சிலைகள் மூடல்..!

சுற்றிவளைக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி.. வாரிசு, துணிவு போஸ்டர்கள் அகற்றம் - கல்வெட்டுகள், சிலைகள் மூடல்..!
x

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவும் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று வெளியானது. அதன்படி பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது. இச்சூழலில் நேற்றே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.



அதன்படி அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் அரசு சார்ந்த கல்வெட்டுகளும் கட்சி தலைவர்களின் சிலைகளும் மூடப்படுகின்றன. இதேபோல பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களுக்காக ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களும் அகற்றப்படுகின்றன.




பிப்.27ல் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. ஒருபுறம் தேர்தல் ஆணையம் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், மறுபுறம் அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்து வருகின்றனர். கூட்டணி கணக்குகள், வார்டு அளவில் கூட்டங்கள் என பம்பரமாய் சுழன்று வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்தபின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், அனைவரின் கவனமும் ஈரோடு கிழக்கு தொகுதி பக்கமாகக் குவிந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்